Monday, June 14, 2010

சாரலில் முகம் நனைத்தாய்,
தூரலில் உடல் நனைத்தாய்,
உன்னை முழுதாக அடையும் முன்பே காணமல் போய்விட்டாய்,

விரைந்து வா மழையே,
வரவேற்க காத்து இருக்கிறேன் கையில் கருப்பு கொடி(குடை) இல்லாமல் ....

மழை

மேகங்கள் தங்களின் பாரங்களை,
பூமிக்கு தாரை வார்த்து கொடுத்தன,

கண்ணிருடன்

மழை

நிறை மாத கர்பிணி மேகங்கள்,
பிரசவித்தன......
விரலோடு விரல் சேர்த்தாய்,
முகத்தோடு முகம் கலந்தாய்,
என் உடலோடு உடல் கலந்து மெய் சிலிர்த்தாய்,

சட்றென்று தரை இறங்கி மண்ணோடு மண்ணாகி விட்டாய்,
மழையே ஒரு பெண்ணின் சுகம் உன்னில்.....