Tuesday, June 15, 2010
பிரிவுகள் நிரந்தரம் அல்ல என்று நினைத்திருந்தேன்
பின்னாட்களில் அவை நிரந்தரம் என்று அறியாமல் ......
தொலைந்து போன என் நாட்களில்
கிடைத்தது நீயும், உன் அன்பும்....
தொலைந்தது என் தூக்கமும் துக்கமும் ......
என்றோ நான் எழுதிவைத்த நாட்குறிப்பில்
காணவில்லை என் பெயருடன் இருந்த உன் பெயர் .....
கிடைத்து விட்டது உன்பெயர்
திருமண அழைப்பிதழில்
ஆனால் அருகில்
என் பெயருக்கு பதிலாக ................
உறைந்து போன என் உதிரங்களில்
உடைந்த மேகங்களாய் உன் நினைவுகள் .....
புரிந்துகொள் என்றாய்
புரியவில்லை எனக்கு
நீ என்னை விட்டு போய்கொண்டு இருக்கிறாய் என்று ........
தொலைந்து போய் விட்டேன் தேடாதே ....
உன்னில் அல்ல .....
நீ கொடுத்த ஏமாற்றங்களில் .....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)