Thursday, June 24, 2010

மனதுக்கு சுவடுகளை அழிக்க தெரிந்திருந்தால்
நீயும் உன் சுவடுகளும்
சுவடு இல்லாமல் போயிருப்பீர்கள் ......
ஆயிரம் முறை நீ இல்லை என்று சொன்னாலும்
காத்திருப்பேன் .....
ஒரு முறையேனும் நீ சரி என்று சொல்வாய் என்று
காலங்கள் கடந்தாலும் .....
தொடவும் முடியாமல், தொலைக்கவும் முடியாமல் நீ
சுழற் காற்றில் சிக்கிய காற்றாடியாய் நான்
ஊமை நெஞ்சுக்கு தெரியது
வலிகளை கொடுப்பது நீ என்று ...

உனக்கு தெரியது ஆயிரம்முறை
நீ அதை கொடுத்தாலும் உன்னை மட்டுமே நினைக்கும் என்று ...
நீ இல்லை என்று சொல்லிவிட்டாய்
உன் இதயம் சொல்கிறது
நான் இன்னும் அதில் இருக்கிறேன் என்று.....

ஏன் மறுக்கிறாய்
உயிர் கொண்ட காதலின் உணர்வுகளை.....

ஏன் உனக்குள் இந்த போராட்டம்
பேதை பெண்ணே......

சொல்லாமல் சொல்லிவிட்டு சென்ற
உன் விழிகள் இன்று மௌனமாக சாட்சி சொல்கிறது
உன்னை நீயே ஏமாற்றி என்னை காய படுத்துகிறாய் என்று .....
நீ மறுத்தாலும் பொய்யாக போக போவதில்லை
நான் கொண்ட காதலும்
நீ கொண்ட நட்பும்