Friday, August 19, 2011

எங்கிருக்கிறாய் என் தோழியே ....

அள்ளி அணைக்க வேண்டாம் 
ஆறுதலாய் ஒரு வார்த்தை போதும் 

கால் கடுக்க காத்திருக்க வேண்டாம் 
கன நேரம் போதும்

முத்தத்தின் ஈரம் வேண்டாம் 
முகத்தில் புன்னகை போதும்

கோபம் வேண்டாம் 
கொஞ்சம் ஊடல் போதும்

எங்கிருக்கிறாய் என் தோழியே ....
காத்திருக்கிறேன் உன் மடியில் முகம் புதைக்க .......


No comments: